Friday, February 11, 2011

ஒரு லட்சியவாதியின் காதல் கதை - அத்யாயம்-12

சென்னை வந்தடைந்தேன். அருணின் உறவினரான தமிழ்ச்செல்வனின் வீட்டில் தங்குவதாக முன்னரே முடிவெடுத்திருந்ததால், என் வருகையை அவனுக்கு அருண் முன்னரே கூறி இருந்தான். என்னை பேருந்து நிலையத்திற்கே வந்து சந்தித்த தமிழ், என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

கல்லூரியின் கடைசி நாளில் முடிவெடுத்த தேதியில், மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே, நானும் அருணும் சந்தித்தோம். அருண் என்னைக் கண்டதும், ஓடி வந்து அணைத்துக்கொண்டான். சந்தியா தாமதமாக வந்தாள். சந்தியா வருவதை பார்த்த அருண், அவளை கோவமூட்ட, என்னை அணைத்தபடி நின்றான். அதைப்பார்த்த சந்தியா அருணை பார்த்து, தன் ஆள்க்காட்டி விரலை காண்பித்து முறைத்துக் கொண்டே நடந்து வந்தாள். அதை கண்ட அருண், என் கழுதை இறுக்கி அலுத்துவது போல பாவிக்க, சந்தியா அக்கம் பக்கம் "கல்" ஐ தேடியபடியே அருகில் ஓடி வந்தாள்.

"டேய் அருண்.... ஆனா ஒரு நாள் நீ என்கிட்டே நல்லா வாங்க போற. அன்னைக்கு தெரியும் சந்தியா யாருன்னு." என்று கூறி சிரித்தாள்.

வெகு நாட்களுக்கு பிறகு நாங்கள் சந்தித்ததால், வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
"என்ன அருண், உன் pilot ட்ரைனிங் எப்படி போகுது??" என்றாள் சந்தியா.
"அட. அத ஏன் சந்தியா கேக்கற... கொடுமையா இருக்கு. கிளாஸ் ரூம்ல உக்காரவெச்சு நம்ம 1st இயர்ல படிச்ச பாடத்தையெல்லாம் மறுபடியும் நடத்துறாங்க. அத விடு. உன் MBA கிளாஸ் எப்படி போகுது.??"

"உனக்கு படிச்சதயே படிக்க போர் அடிக்குது. எனக்கு என்ன சொல்றங்கனே புரியல. Aero லயாவது சர்க்யுட், போர்டு, லேப் எக்ஸ்பெரிமென்ட்னு இருக்கும், இங்க எல்லாம் தியரியா இருக்கு. புரியாத மொழில படம் பாத்த மாறி இருக்கு. women's காலேஜ் ஆ வேற போச்சு. சைட் அடிக்க கூட ஆள் இல்ல." என்று சொல்லி என்னை வெறுப்பேற்றினாள் சந்தியா.

பேசிக்கொண்டே நடந்து சென்று கடல் அலையில் கால் நனைத்தோம். "மச்சான்..!! மீன் சாப்படலாம் டா. smell நல்லா இருக்கு." என்ற அருண், ஒரு கைவண்டி கடைக்கு எங்களை அழைத்துச் சென்றான்.
"தம்பி.. 3 மீன் குடுப்பா சூடா.." என்று சொன்ன அருணைப் பார்த்து சந்தியா "எனக்கு வேண்டாம் அருண். நீங்க சாப்பிடுங்க." என்றாள்.

"அட.. நீ என்ன சந்தியா.. ஏன் காமெடி பண்ற??? 3 மீன் எனக்கு மட்டும் தான் ஆர்டர் பண்ணேன். உனக்கும் சேத்துனு நெனச்சுட்டியா?? நீ எப்பவுமே இப்படி தான் போ..." என்று கேலி செய்ய, சந்தியா "டேய், உனக்கு நேரம் நெருங்கிட்டு இருக்குடா.. மறந்துறாத..." என்றாள்.

"இந்தா மச்சான்... நீ கேட்ட புக்ஸ். ஒழுங்கா prepare பண்ணு. உனக்கு சொல்லனும்னு இல்ல.. selection லிஸ்ட்ல உன் பெயர் தான் 1st இருக்கணும்" என்று கட்டளையிடும் அருண் ஒருபுறம் என்றால் "உன்மேல நம்பிக்கை இருக்கு கிருஷ்ணா. நீ அசத்திருவ..!!!" என்று ஊக்கப்படுத்தும் சந்தியா மறுபுறம்.

"Thanks அருண்... Thanks சந்தியா..."

"டேய் மச்சான்.... தமிழ் இன்னைக்கு ஊருக்கு போறான்ல. அவன் கிட்ட ஒரு செல்லுலார் போன் இருக்கு இல்ல. அத உன்கிட்ட குடுக்க சொல்றேன். இந்த வாரம் புள்ள யூஸ் பண்ணிக்க. சீக்கரம் நானும் ஒன்னு வாங்கிடுவேன். காலம் எப்படி மாறிபோச்சு பாரு. எங்க இருந்தாலும் பேசறதுக்கு ஒரு போன். உன்ன மாறி ஒருத்தன் தான் இத கண்டுபுடிசிருப்பான்" என்று மறைமுகமாக என் திறமையை பாராட்ட அருண் எப்போது தவறுவதே இல்லை.

"எங்க அப்பா கூட ஒரு செல்லுலார் போன் என்னை வாங்கிக்க சொல்லி இருக்கார். எங்களுக்கு தான் இது ரொம்ப useful" என்ற சந்தியா, தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு "அச்சச்சோ.... Time ஆச்சு. அப்பா தேடுவார். நான் வீட்டுக்கு போகணும்" என்று கூறிக்கொண்டே எழுந்து நின்றாள்.

"சந்தியா... டேய் கிருஷ்ணா.... நீங்க அப்படியே பேசிட்டு நடந்து போங்க. அந்த சட்டில இருக்கற மீனுக்கு என்ன புடிச்சிருக்கு போல. அதான் அடுப்புல துடிக்குது. நான் அதையும் சாப்டுட்டு பைக் கிட்ட வந்து வெயிட் பண்றேன்." என்ற அருணை பார்த்து சந்தியா "பக்கத்துல இருக்குற ரெண்டு மீனுக்கும் கூட உன்ன புடிச்சிருக்காம். அதனால அதையும் சாப்டுட்டு மெதுவாஆஆஆஆ...... வா".

"புரியுது புரியுது போ... சந்தோசமா இரு போ.." என்று தான் கையை உயர்த்தி ஆசி வழங்குவதை போல பாவிதான் அருண். அவனை பார்த்து சிரித்துவிட்டு நானும் சந்தியாவும் நடக்க ஆரம்பித்தோம்.

"இன்னும் 2 நாள்ல உன் கனவு நிறைவேற போகுது. நெனச்சாலே ரொம்ப சந்தோசமா இருக்கு கிருஷ்ணா. ஆனா ஒரு வருத்தம். அன்னைக்கு எனக்கு செமினார் இருக்கு. என்னால உன்னோட வரமுடியாது. நான் எங்க அப்பா செல்லுலார் போன் அ அன்னைக்கு காலேஜ் எடுத்துட்டு போறேன். இது தான் நம்பர் XXXXXXXXXX. Interview முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு. நான் செமினார்ல இருந்தா, முடிஞ்சதும் கால் பண்றேன். அந்த சந்தோசமான செய்திக்காக நான் வெயிட் பண்றேன். ஆல் தி பெஸ்ட் கிருஷ்ணா..."

"நான் interview க்கு போறதுக்கு முன்னாடியும் உனக்கு கால் பண்றேன். உன் வாய்ஸ் அ கேக்கணும் சந்தியா"

"OK கிருஷ்ணா.. Job கெடச்சதும், அடுத்து என்ன???" என்று ஓர் எதிர்பார்ப்புடன் கேட்டாள் சந்தியா. "போகவேண்டியது தான்" என்று கூறி சந்தியா அருகே வண்டியை நிறுத்தினான் அருண்.

"என்ன சந்தியா.. உங்க ரூட்க்கு இங்க ஈசியா பஸ் கிடைக்காதுல்ல???" என்றான் அருண்.
"ம்.... 2 இல்ல 3 பஸ் மாறி தான் போகணும். என் ஸ்கூட்டிய சர்வீஸ்க்கு விட்டுட்டேன். அதான் பஸ்ல வந்தேன்." என்று கூறி சந்தியா, அருகில் வந்துக்கொண்டிருந்த பேருந்தினை பார்த்துக்கொண்டிருந்தாள். கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் சந்தியாவை அனுப்ப மனமில்லை எனக்கு.

"டேய் மச்சான். தமிழ் வீடு இங்க தான பக்கத்துல. நான் போய்க்குவேன். நீ சந்தியா வ அவங்க வீட்ல விட்டுட்டு போறியா?? ப்ளீஸ்." என்றேன்.

"என்ன மச்சான்...??? இது கூட செய்ய மாட்டேனா?? சந்தியா... வா..." என்று கூறிய அருணை பார்த்து "இல்ல நான் பஸ்லயே..................." என்று சந்தியா சொல்ல, "அட பயப்படாத சந்தியா. நான் flight ஏ ஓட்ட போறேன். பைக் ஓட்ட மாட்டேனா???. உன்ன பழிவாங்க இன்னும் ரொம்ப நாள் இருக்கு. பயப்படாமா ஏறிக்க.." என்று கூறி சிரித்தான் அருண்.

சந்தியாவும் ஏறி அமர, "மச்சான்.. நான் நாளைக்கு ட்ரைனிங்க்கு போய்டுவேன். Friday evening
தான் வருவேன். நான் வந்ததும் ட்ரீட் வெச்சுக்கலாம். Interview அன்னைக்கு evening ட்ரைனிங் முடிஞ்சதும் உனக்கு போன் பண்றேன். ஆல் தி பெஸ்ட்..!! "
என்று கூறி கை குலுக்கிவிட்டு சந்தியாவை அழைத்துச்சென்றான். சந்தியா என்னை பார்த்தபடியே சென்றாள்.

மறுநாள் Interview விற்கு தயாராகிக்கொண்டிருந்தேன். தமிழின் செல்லுலார் போன் சிணுங்கியது. மறுமுனையில் சந்தியா. "என்ன கிருஷ்ணா.. நல்லா prapare பண்ணிட்டியா? நாளைக்கு உன் life ஏ மாற போகுது. ஆல் தி பெஸ்ட்".

"Thank you சந்தியா.. நாளைக்கு காலைல ஆட்டோ ஏறிட்டு உனக்கு போன் பண்ணுவேன். அதனால போன் அ கைலயே வெச்சிரு." என்றேன்.

என் வாழ்வில் விடியலைக் கொண்டுவரப்போகும் நாள் விடிந்தது. நான் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், போன் சிணுங்கியது. "கிருஷ்ணா... ஆல் தி பெஸ்ட் பார் யுவர் இண்டர்வ்யு" என்றார் ஜான் சார். "Thank you சார். நானே உங்களுக்கு போன் பண்ணனும்னு இருந்தேன்"

"பரவால கிருஷ்ணா. உன்னக்கு விஸ் பண்ண நான் தான் கூப்பிடனும். சந்தியா இந்த போன் நம்பர் அ குடுத்தாலதான் என்னால உனக்கு விஷ் பண்ண முடிஞ்சுது. நல்லபடியா interview முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணு. I'll be waiting for your call Krishna" என்றார்.

எத்தனை பேர் என் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். இத்தனை நல்ல உள்ளங்களை வென்றதே என் முதல் வெற்றி தானே. ஒரு பையில் என் certificate file ஐயும், செல்லுலார் போனையும் வைத்துக்கொண்டு உற்ச்சாகத்துடன் புறப்பட்டேன்.

"உன்னால் முடியும்" என்று முன்கன்னாடியில் ஒட்டிய ஸ்டிக்கருடன் ஒரு ஆட்டோ என் அருகே வந்து நின்றது. என் தன்னம்பிக்கைக்கு மேலும் வழு சேர்த்த அந்த ஆட்டோவில் ஏறி புறப்பட்டேன்.

தொடரும் நேர்முகத்தேர்வு நாள்.....

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

No comments:

Post a Comment