ஆட்டோவில் ஏறியதும் சந்தியாவிற்கு போன் செய்ய, அவளோ "கிருஷ்ணா... இப்ப தான் உனக்காக கோவிலுக்கு போய் வேண்டிட்டு வந்தேன். எல்லாம் நல்லபடியா நடக்கும். உனக்கு தான் Interview, ஆனா நான் தான் ரொம்ப டென்ஷன் அ இருக்கேன். Evening காலேஜ் முடிஞ்சதும் நான் பீச்சுக்கு வறேன். சண்டே மீட் பண்ண அதே இடத்துக்கு வா. ஓகே???? குட் லக் கிருஷ்ணா.."
"Thank You சந்தியா..." என்று சொல்லி போனை பைக்குள் வைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அருகில் வந்துகொண்டிருந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து நான் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதிவிட, ஆட்டோ என் வலதுபுறமாக 3 முறை சுற்றி, என்னை வெளியே தூக்கி எறிந்தது. என் இடதுகை என் பையை இறுக்கி பிடித்துக்கொண்டு இருந்தது. வலதுகை எலும்பு உடைந்துவிட்டதால், கை வீக்கமாகிக் கொண்டே போனது. சட்டை முழுதும் இரத்தமாக, என்ன நடந்தது என்று உணருவதுக்குள் நான் அங்கேயே மயங்கிவிட்டேன். இலட்சியத்தை தழுவிட நினைத்த என்னை, மரணம் தழுவிட ஆசைப்பட்டது.
மாலை சுமார் 6 மணி. மெல்ல என் கண்களை திறந்து பார்த்தேன் மருத்துவமனை படுக்கையில் இருந்து. கட்டுப்போட்ட நிலையில் என் வலதுகை. உடல் முழுதும் வலி. ஆட்டோவில் இருந்து எறியப்பட்டதால், கை கால்களில் காயங்கள். என் இடதுகையில் சொட்டு சொட்டாய் நீர் துளிகள் விழுவதை உணர்ந்தேன். மெல்ல என் முகத்தை இடப்புறம் திருப்ப, கண்கள் குலமாக சந்தியா என் அருகே அமர்ந்திருந்தாள். என் கையை மெல்ல எடுத்து அவளது கண்ணீரை துடைக்க, "என்ன டா கிருஷ்ணா. என் உயிரே போய்டுச்சு" என்று சொல்லி, என் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, என் மார்பில் சாய்ந்தாள்.
"சந்தியா... அழாத. ஒன்னும் பெருசா ஆகலேல." என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், "என்ன மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி. ஹொவ் ஆர் யு பீலிங் நவ்.??" என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்த டாக்டரை கண்டதும் சந்தியா என்னிடம் இருந்து தன்னை சற்று விலக்கிக் கொண்டாள்.
"பரவால டாக்டர். வலி தான் அதிகமா இருக்கு."
"இன்னும் 2 நாள் வலி அப்படி தான் இருக்கும். உங்க கை fracture ஆயிருக்கு. ஆட்டோ ல இருந்த கம்பியோ ஆணியோ உங்க கால்ல கிளிச்சிருக்கு. அதுக்கு stitching போட்டு இருக்கு. மத்ததெல்லாம் வெறும் வெளிக்காயம் தான். அதுக்கும் treatment பண்ணி இருக்கோம். 1 வீக் ல கால் stitching பிரிச்சரலாம். கை கட்டு மட்டும் பிரிக்க 1 மாசம் ஆகும். அதுவரைக்கு கொஞ்சம் ஸ்பெஷல் க்கேர் எடுத்துக்கங்க. அதுக்கப்பறம் ஒன்னும் problem இருக்காது." என்ற டாக்டர் சந்தியாவை பார்த்துவிட்டு திரும்ப என்னை பார்த்து "இது உங்க girl friend ஆ???? நீங்க கண் முழிக்கறவரைக்கும் ரொம்ப டென்ஷன் ஆ இருந்தாங்க, actual ஆ உங்க செல்லுலார் போன் ல இருந்த last dialed நம்பர் க்கு கால் பண்ணப்ப இவங்க கெடச்சாங்க. ரொம்ப பயந்துட்டாங்க. நான் தான் ஒன்னும் பெரிய problem இல்லை னு சொல்லி console பண்ணேன். டேக் ரெஸ்ட்..எதாவது வேணும்னா nurse அ கூப்பிடிங்க. அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க. I'll see you tomorrow" என்று டாக்டர் கூறிச் செல்ல, நான் சந்தியாவை பார்த்து "பயப்படாத சந்தியா. அதான் ஒன்னும் பெருசா இல்லை னு டாக்டர் சொல்லிட்டாரே"
"டேய்... உனக்கு தெரியாது. நான் எவளோ அழுதேன்னு. நீ கண் திறக்கற வரைக்கும் உயிரே இல்ல. இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு நீ என்கிட்டே பேசுனதும். இந்தா... இந்த ஜூஸ் அ குடி" என்று என் அருகில் வந்து என்னை அமர வைத்து, என்னை பருக வைத்தாள்.
"அருண் கால் பண்ணுனான் டா. நடந்தத சொன்னேன். அவனும் ரொம்ப பீல் பண்ணுனான். Training ல இருந்து வெளில வர முடியாதாம். Friday evening வந்து உன்ன பாக்கறேன்னு சொல்ல சொன்னான். அது வரைக்கும் என்ன பாத்துக்க சொல்லி இருக்கான். அப்பாக்கு வேற நெஞ்சு வலி வந்து hospital ல இருக்கார். அம்மா தான் hospital கூட்டிட்டு போனாங்க."
"அப்படியா??? நீ மொதல்ல அப்பாவ போய் பாரு. எனக்கு இங்க ஒன்னும் problem இல்ல."
"இல்ல டா. நான் உன் கூட இருக்கேன். அப்பாவ பாத்துக்க அம்மா இருக்காங்க. உன்ன பாத்துக்க யார் இருக்கா??? நான் தானே...." என்று கூறும் அவளது பாசம் என்னை கண்கலங்க வைத்தது.
"சந்தியா... நான் நல்ல தான் இருக்கேன். நீ நைட் இங்க இருக்க வேண்டாம். அது உங்க வீட்ல பிரச்சனை ஆகும். அது மட்டும் இல்லாம அப்பா வேற hospital ல இருக்கார்ல. போய் அப்பாவ பார். I'll be fine here. OK???"
"சரி டா. நான் நாளைக்கு காலைல சீக்கரம் வறேன். எதாவது வேணும்னா போன் பண்ணு" என்று கூறி, செல்ல மனமில்லாமல் சென்றாள் சந்தியா.
அன்று இரவு முழுவதும் வலி உடலில். அதைவிட அதிகமாக மனதில். எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள், இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஒழுகும் குடிசையில் வாழ்ந்தபோதும், கிழிந்த ஆடைகளை உடுத்திக்கொண்டு அலைந்தபோதும், உணவில்லாமல் உறங்கிய நாட்களிலும் கூட இப்படி ஒரு வேதனை இருந்தது இல்லை என் மனதில். என் ஒரே இலட்சியத்தை இழந்துவிட்டு நிற்கும் இந்த நாள் தான் என் வாழ்வில் மிகவும் மோசமான தருணம்.
அப்படி நான் என்ன பிழை செய்துவிட்டேன்??? சாதிக்க நினைத்தது தான் தவறா??? ஏன் இந்த முட்டுக்கட்டை??? ஏன் என்னை சோதனைக்கும் வேதனைக்கும் உட்படுத்துகிறது என் வாழ்வு??? இத்தனை பேரின் வாழ்த்துக்கள் எங்கு போனது??? சந்தியாவின் பிராத்தனை என்ன ஆனது???
என் இலட்சியத்தின் முதல் தோல்வி இது. திறமை இருந்தும், தகுதி இருந்தும், அளவில்லா தன்னம்பிக்கை இருந்தும், விதியிடம் தோற்றுவிட்டேனே நான். இப்படி ஒரு வாழ்வை தொடர்வது தேவை தானா???
தொடரும் கேள்விக்கான பதில்....
என்றும் அன்புடன்,
இராஜராஜன்
கதைய தொடர் நாடகம் மாதிரி எழுதாத, வாழ்க்கையில எல்லாருக்கும் கஷ்டம் வருவது இயற்கை, அனால் கஷ்டம் மட்டுமே வாழ்க்கைய இருக்க கூடாது. அப்புறம் வாழ்க்கைலே விரக்திதான் மிச்சமா இருக்கும்.
ReplyDeleteமாப்ள, என்ன கஷ்டம் வந்தாலும் தன்நம்பிக்கைய இழக்க கூடாது. அது தான் நம்ம concept....
ReplyDelete