Saturday, November 27, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-7

அன்று தான் முதல்முறையாக NASA மீது மட்டும் இருந்த என் காதல் சந்தியாவின் பக்கமும் திரும்பியது.

அவள் ஒன்றும் பெரிதாய் செய்துவிடவில்லை. அனால் அவள் செய்ததை யாரும் செய்துவிடவில்லை. மாணிக்கவாசகம் அய்யா, அருண் மற்றும் ஜான் சார் உட்பட அனைவரும் இந்த கண்காட்சியில் கலந்துகொள் என்று அக்கறையோடு ஆலோசனை கூறினர், அனால் சந்தியா மட்டுமே ஒரு படி மேல் சென்று அதை செயல் படுத்த முயற்சித்தாள். என்னை சாதிக்கவைக்கும் முயற்சியில் சந்தியாவின் அக்கறை எப்போதும் மேலோங்கியே இருந்தது. என் கனவை தன் கனவாய் நினைத்தாள்.

"போய் defect அ கண்டுபுடி. Demo இன்னும் ரெண்டு வாரத்துல இருக்கும்" என்று கூறி சென்றாள் சந்தியா. அருகில் இருந்த அருண் என்னை திரும்பி பார்த்தான். "டேய். நைட் அவளோ நேரம் நான் பணம் தரேன்னு சொன்னேன். அப்ப என்னமோ டயலாக் எல்லாம் பேசுன. இப்ப அவகிட்டயும் பேசவேண்டியது தான! ஆனா மச்சான், உன்ன எல்லாம் நம்பவே கூடாது டா!" என்று கூறி முறைத்தான். அருணை பார்த்து "மச்சி! பணம் கட்டிட்டா! என்ன சொல்ல சொல்ற. எல்லாம் நல்லதுக்கு தான். device ல கொஞ்சம் defect இருக்கு. வா போய் கண்டுபிடிப்போம். நீ தான் நல்ல குற்றம் கண்டுபுடிப்பியே." என்றேன் என் கையை அருண் தோளில் வைத்து அணைத்தபடி. இருவரும் சிரித்தபடிய நடந்து சென்றோம்.

Device தயார் ஆனது. அணைத்து கோளாறுகளும் சரி செய்யப்பட்டன. Demo அன்று என்னுடன் சந்தியா, அருண், ஜான் சார் வந்திருந்தனர். சிறப்பான முறையில் device இன் செயல்பாடுகளை விளக்கி அனைவரது பாராட்டையும் பெற்றேன். இந்த கண்டுபிடிப்பானது எனக்கு ஒரு மிகபெரிய அடையாளத்தை கொடுக்கும் என்று அனைவரும் கூறினர். சாதிக்க ஆரம்பித்துவிட்டோம் என்ற தன்னம்பிக்கையும் பெருமிதமும் என்னை மேலும் வலுபடுத்தியது. நன்றி சந்தியாவுக்கு தான்.

அகில இந்திய விமான உபகரணங்கள் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பில் சந்தியாவின் தந்தை செயலாளராக இருந்தார். கண்காட்சியை பார்வையிட ஒருநாள் வந்திருந்தார். அன்று அவரை எனக்கு அறிமுகப்படுத்தினாள் சந்தியா. என்ன ஒரு தன்னம்பிக்கை அவர் முகத்தில்.
அவரிடம் ஒரு மாபெரும் லட்சிய வேட்கை தென்பட்டது. என் கண்டுபிடிப்பு அவரை பெரிது ஈர்த்தது. இந்த device ஐ தங்கள் நிறுவனமே வாங்கிக்கொள்வதாக கூறினார். அது மட்டுமின்றி தன் நிறுவனத்தில் ஆராய்ச்சி துறையில் சேரவும் அழைத்தார். அதற்க்கு உடனே சந்தியா "அப்பா! அவன் NASA க்கு போக போறான்.... நம்ம சின்ன கம்பெனி ல எல்லாம் சேர மாட்டான்" என்றாள். என் இலட்சியத்தை கண்டு மீண்டும் பாராட்டிய அவர் "வீட்டுக்கு ஒருநாள் வாப்பா" என்றார். அருகில் இருந்த அருண் "நீங்க கூப்படலேனாலும் எப்படியும் கண்டிப்பா ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு வருவோம்" என்றான் சுட்சகமாக. சந்தியாவின் முகத்தில் சந்தேகமும் சந்தோசமும்.

சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்கினர். அதில் என்னுடையதும் ஒன்று. இது நடக்கும் என்று சந்தியா முதலிலேயே கூறி இருந்தாள். என் திறமை மீது அவளுக்கு இருந்த நம்பிக்கை தான் என்னை இதில் பங்கெடுக்க வைக்க வேண்டும் என்று அவளை தூண்டி இருந்தது. பல நிறுவனங்கள் என்னை அவர்களது நிறுவனத்தில் சேர அழைத்தார்கள். அனைத்தையும் நிராகரித்தேன் என் NASA விற்காக.

கல்லூரி நாட்கள் வேகமாக நகர்ந்தது. என் காதலும் வேகமாக வளர்ந்தது. அவள் எல்லாரிடமும் பழகுவதை விட, என்னிடம் பழகுவது எல்லாருக்கும் சற்று தனித்தே தெரிந்தது, எனக்கும் அப்படி தான். பலரும் என்னை பார்த்து அவள் உனக்கு சரியானவள் தான் என்று பல முறை கூறி இருக்கிறார்கள், அதையல்லாம் அப்படி ஒன்றும் இல்லை எங்களுக்குள் என்று கூறி தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால் அது உண்மையா என்று நான் எனக்குள் கேட்கும் போதெல்லாம் என் மனம் எப்போதும் மௌனமே சாதிக்கிறது. சந்தியாவின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமல் நான் எந்த முடிவையும் எடுப்பதாக இல்லை என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். இந்த நிலையில் என் மனதில் பல குழப்பங்கள் எழுந்தன.

என் நிலை என்ன? சாதாரண குடும்பத்தில், அன்றாடம் உணவுக்கு கஷ்ட்டபட்ட என் காலங்களையும், பிறந்ததில் இருந்து வறுமையை பற்றி அறியாத சந்தியாவின் வசதியையும் நினைத்து பார்கிறேன்.

என் தகுதி என்ன? சற்றும் எட்டாத உயரத்தில் இருக்கும் அவளை உரிமையக்கிகொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா..??? என்று எப்போதும் கேள்வி கேட்டு என் மனம் என்னை காயப்படுதிக்கொண்டே
இருக்கிறது.

சந்தியா என்ன நினைப்பாள்? கள்ளம் கபடமின்றி என்னிடம் அன்பாய் பழகும் சந்தியா என்ன நினைப்பாள். உன் கனவை மதித்து தான் உன்னிடம் அக்கறையோடு பழகினேன், இப்படி உன்மனதில் விஷச்செடி முளைக்கும் என்று நினைத்திருந்தால், பழகியே இருக்கமாட்டேன்.
என்று கூறிவிட்டால், இதனை நாள் அவள் கட்டிய அன்புக்கு நான் தகுதியற்றவனாகி போவேனே.
அதுமட்டும்மின்றி என்னை அவள் முழுவதுமாக தவிர்த்துவிட்டால்?? எப்படிபட்ட தவறை நான் செய்திருகிறேன் என்று பின் வருந்தியும் பயனிருக்காதே!!

இதை அனைத்தும் தாண்டி, என்னை பெரிதும் கலங்க செய்தது எங்கள் ஜாதி வேறுபாடு. இப்படி குழப்பம் என்னை வாட்டியடுக்க ஒரு நாள் "ஏன்டா உனக்கு இந்த காதல் எல்லாம், படிக்க தான போன! போய் ஒழுங்கா படி, படிச்சு NASA ல செர்ர வழிய பாரு. நடக்காத ஒண்ணுக்காக ஆசைப்பட்டு நீ சின்ன வயசுல இருந்து ஆசைப்பட்ட கணவ, லட்சியத்த இழந்துராத..." என்று மாணிக்கவாசகர் அய்யா சொல்ல, சட்டெண்டு விழித்தபின் தான் தெரிந்தது அது கனவு என்று. ஒருபோதும் எங்கள் இணைப்பு சாத்தியமாகாது என்று என் மனது ஆணி அடித்தாற்போல உரைத்துவிட என் காதலை கைவிட முடிவெடுத்தேன்.

தொடரும் கலங்கவைத்த கல்லுரி நாட்கள்..........

என்றும் அன்புடன்,

இராஜராஜன்