Sunday, January 24, 2010

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-6

கல்லூரி நாட்கள் அழகாய் நடைபோட்டது சந்தியாவை போல.

பேராசிரியர் ஜான் அந்தோனி சார் இன் தூண்டுதலின் பெயரில் நான் ஒரு aero monitoring device ஐ கண்டுபிடித்தேன். அந்த device ஆனது விமானத்தின் அணைத்து கருவிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும். விமானத்தில் ஏதேனும் ஒரு சிறு கோளறு ஏற்படும் போது இந்த கண்காணிப்பு கருவியானது அக்கோளாறின் முழு விவரத்தையும், அதை எளிதில் சரி செய்ய பயன்படுத்த வேண்டிய யுக்திகளையும் பதிவு செய்து விமானிக்கு காண்பிக்கும். தற்போது பயன்படுத்திவரும் கண்காணிப்பு கருவியோடு இதை இணைக்கும் போது அதன் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். என் இந்த கண்டுபிடிப்பானது Testing phase இல் இருந்தது.

அகில இந்திய விமான உபகரணங்கள் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பானது ஒரு மாபெரும் விமான ஆராய்ச்சி மற்றும் உபகரணங்கள் கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்திருந்தது. அதன் விளம்பரம் செய்தித்தாளில் வெளியானது. அதை அறிந்த மாணிக்கவாசகம் அய்யா என்னை சந்திக்க கல்லூரிக்கு வந்திருந்தார். மாலை நேரம் என்பதால் நான் விளையாட்டில் இருந்தேன். அய்யா என்னை வந்து மைதானத்திலேயே பார்த்து விளம்பரத்தை காண்பித்தார். அருகில் இருந்த சந்தியா அதை பார்த்து என் Aero monitoring device ஐ Demo விற்கு வைக்கலாம் என்று ஆலோசனை கூற, அருணனும் இது ஒரு மிக பெரிய வாய்ப்பு என்றான். இந்த கண்காட்சியில் பங்குபெற Rs.2500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பங்கு பெற ஆசை இருந்த எனக்கு Rs.2500 மட்டுமே சிரமமாக தெரிந்தது. இதற்காக என்னை சந்திக்க வந்த ஐயாவிடம் எப்படி மறுத்து கூறுவதென்று தெரியாது நின்றுகொண்டிருந்தேன். என் நிலையை புரிந்து கொண்ட அய்யா "டேய்! உன்கிட்ட பணம் இருக்காது. இந்த பணத்த வெச்சுக்கோ." என்றார். "Device இன்னும் complete ஆகல! டெஸ்டிங் ல கொஞ்சம் பிரச்சன இருக்கு. இந்த முறை இத வைக்க முடியாது. நெக்ஸ்ட் இயர் பாத்துக்கலாம் அய்யா." என்றேன் பொதுவாக.
"சரி! பரவல. இத செலவுக்காக வெச்சுக்கோ" என்றார் பணத்தை நீட்டியபடி. "இல்ல அய்யா வேண்டாம்! நேத்து தான் வீட்ல இருந்து பணம் அனுப்புனாங்க! அதுவே இருக்கு" என்றேன். அது பொய் என்பது ஐயாவிற்கு தெரியாமல் இருக்குமா? எங்கள் குடும்ப நிலையை நன்கு அறிந்த அவர் அமைதியாக சிரித்துவிட்டு என் தோலை தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார்.

அன்றிரவு உறங்காமல் அமர்ந்து அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருந்தேன். உன்னதமான இலட்சியத்தை கூட அடைய தடையாக இருக்கும் பணத்தின் மதிப்பினை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அருண் என்னை பார்த்து "டேய்! நான் வேணும்னா உனக்காக பணம் கட்றேன். போய் participate பண்ணு டா!" என்றான் என்னிலை அறிந்து. "இல்ல மச்சான்! பரவால விடு. அடுத்த தடவ சும்மா கலக்கிரலாம்!" என்று ஆறுதல் கூறினேன் எனக்கும் சேர்த்து.

மறுநாள் காலை நானும் அருணும் ஜான் சார் ஐ சந்தித்தோம். இது ஒரு மிகபெரிய வாய்ப்பு. பல புகழ்பெற்ற நிறுவனங்களும் அதன் நிறுவனர்களும் இதில் பங்கெடுப்பார்கள் என்று அவரும் கூற, "டெஸ்டிங் ல நிறைய defects இருக்கு. இப்ப இத வைக்க முடியாது" என்று அவரிடமும் அதே பதிலை கூறினேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே சந்தியா அங்கு வந்தாள். "கிருஷ்ணா! இத புடி. உனக்காக நானே apply பண்ணிட்டேன். உன் display panel no 35. நாள் ரொம்ப கம்மிய தான் இருக்கு. First testing ஐ complete பண்ணு!" என்றாள். "Very good மா! இப்படி பண்ணுனா தான் இவன் கேட்ப்பான். கிருஷ்ணா, Now go ahead and complete the project soon" என்று கூறிச் சென்றார் ஜான் சார். லேசாக கலங்கிய கண்களோடு சந்தியாவை பார்தேன். அப்போது அவள் என்னை பார்த்த பார்வை "உனக்காக நான் இருக்கேன்" என்று அவள் கூற நினைத்ததை அப்பட்டமாக காட்டியது.

அன்று தான் முதல்முறையாக NASA மீது மட்டும் இருந்த என் காதல் சந்தியாவின் பக்கமும் திரும்பியது.


தொடரும் கல்லுரி நாட்கள்..........


என்றும் அன்புடன்,
இராஜராஜன்